வயது அதிகரிக்கும்போது, நமக்கு பலவித சரும பிரச்சனையும், முடி பிரச்சனையும் வரத்தான் செய்கிறது. அதிலும், நரைத்த முடி வந்துவிட்டால், பாதி வாழ்க்கையே முடிந்து போய்விட்டதென கவலை அடைவோர் தான் நம் நாட்டில் அதிகம். முன்பெல்லாம், நரைத்த முடி தான் ஒருவருடைய வயதையே தீர்மானித்தது. ஆனால் இன்று இளம் வயதிலேயே நரைத்த முடி வந்துவிடுகிறது. இதற்கு காரணமாக மனஅழுத்தம், தவறான உணவு பழக்கவழக்கம், கெமிக்கல் பயன்பாடு மற்றும் முடிக்கு கலர் அடித்தல் போன்றவை உள்ளது.
பொதுவாக நாம் இதற்கு தீர்வாக தேடி செல்வது ஹேர் டையை தான். ஆனால், ஒரு சில வீட்டு வைத்தியத்தை செய்வதாலும் நம்மால் இந்த நரைத்த முடிக்கு நிரந்தர தீர்வை பெற முடிகிறது. அவற்றுள் ஒன்று தான் மூலிகை நீர். பல மூலிகைகள் நரைத்த முடியை கருப்பாக மாற்ற உதவுகிறது. இன்றைய பதிவில், RVMUA அகாடமி நிறுவனரும், பிரபல மேக்கப் ஆர்டிஸ்டும், சரும நிபுணருமான ரியா வஷிஷ்ட் அவர்கள் அளித்த நரைத்த முடிக்கான ஹெர்பல் டிப்ஸை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
தேங்காய் தண்ணீர்
வெள்ளை முடியை கருப்பாக மாற்ற தேங்காய் தண்ணீர் நமக்கு உதவுகிறது. இதனில் ஆக்சிஜனேற்ற பண்புள்ளது. இதன் காரணமாக, உங்களின் முடி மற்றும் உச்சந்தலைக்கு நற்பலன் அளிக்கிறது. முடி சேதமடையாமலும் பாதுகாக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய முடியினை மிருதுவாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதற்கு, ஷாம்பு போட்ட பிறகு, தேங்காய் தண்ணீர் கொண்டு உங்கள் முடியை அலசவும். எந்தவொரு பொருளையும் இதோடு சேர்க்க வேண்டிய தேவையுமில்லை. இல்லையெனில், தேங்காய் தண்ணீரை உங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்தும் வரலாம்.
நெல்லிக்காய் சாரும் பூந்திக்கொட்டையும்
முடிக்கு நன்மை பயக்கும் மற்றொரு உணவு தான் இவை. இது இளநரையை தடுப்பதோடு மட்டுமல்லாமல், பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. இவற்றை தண்ணீரில் இரவில் ஊறவைத்து விடவும். அந்த தண்ணீரை கொண்டு மறுநாள் உங்கள் தலைமுடியை அலசவும்.
வெங்காய சாறு
இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு, வெங்காய சாறினை எடுத்துக்கொள்ளவும். அதோடு கொஞ்சம் நார்மல் தண்ணீரை கலக்கவும். இப்போது அந்த தண்ணீரை கொண்டு உங்கள் முடியை அலசவும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் ஆக்சிஜனேற்ற பண்பு மற்றும் வைட்டமின் - B உள்ளது. இதனால் மயிர்க்காலில் மெலனின் உற்பத்தியாகி பாசிட்டிவ் விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, வெள்ளை முடி கருமையாகவும் மாறும். இதற்கு, ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் ஒரு கையளவு கறிவேப்பிலையை கொதிக்கவிடவும். பிறகு அதனை வடிகட்டி ஆறவிடவும். இப்போது வடிகட்டிய எண்ணெய் கொண்டு முடியை மெல்ல மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு முடியை அலசவும்.
பிளாக் டீ
இதுவும் நரைத்த முடியை கருமையாக்கும் மூலிகை வைத்தியம் தான். இது முடி நரைத்து போவதில் இருந்து நம்மை காக்கிறது. இதற்கு, ஒரு கப் பிளாக் டீயினை போட்டுக்கொள்ளவும். இப்போது அந்த தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். இறுதியாக ஷாம்பு போட்டபிறகு, உங்கள் தலைமுடிக்கு கண்டிஷனராக இதனை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் முடி பளிச்சென இருப்பதோடு, கருமையாகவும் இருக்கக்கூடும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation