கற்றாழை பயன்படுத்தி இயற்கையான வழியில் முடியை ஸ்ட்ராங் ஆக்குவது எப்படி?

கற்றாழை பயன்படுத்தி உங்களின் முடியை வலுப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலமாக படித்தறிந்து பயன் பெறலாம்.

use of aloe vera big
use of aloe vera big

முடியை ஸ்ட்ராங் ஆக்குவதற்கு எந்த ஷாம்புவும் தேவையில்லை. இதற்கு பாட்டி வைத்தியத்தை நாம் செய்து பார்த்தாலே போதும். முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

அழகான முடி என்று எதை சொல்வீர்கள்? முடி ஸ்ட்ராங் ஆகவும், லாங் ஆகவும் இருக்கும்போது அது பார்ப்பதற்கு அழகாக தெரியும். ஒரு சில பெண்களுக்கு முடி ஸ்ட்ராங் ஆக இருக்கும். ஆனால், நீளமாக இருக்காது. ஒரு சில பெண்களுக்கு முடி நீளமாக இருக்கும். ஆனால், ஸ்ட்ராங் ஆக இருக்காது.

எப்போதும் முடி ஸ்ட்ராங் ஆகவும், அதே சமயம் லாங் ஆகவும் இருக்கவே பெண்கள் விரும்புவர். பலருக்கு இவ்வாறு இருப்பது கிடையாது. இதனால், முடி உதிர்வு அதிகம் காணப்படுகிறது.

அடர்த்தியான முடியை பெற வேண்டுமா? விலைமதிப்புள்ள ஷாம்பு பயன்படுத்தியும் எந்தவித பலனும் அளிக்கவில்லையா? எனில், உங்களுக்கு தேவை ஷாம்பு அல்ல, வீட்டு வைத்தியம் தான்.

கற்றாழை, சருமம் முதல் முடி வரை நமக்கு உதவ காத்திருக்கிறது. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுடன் இது போராடுகிறது. இதனால் தான் தங்களுடைய முடியை பாதுகாக்க பல பெண்களும் கற்றாழையை விரும்புகின்றனர். மார்க்கெட்டில் பெரும்பாலும் கற்றாழை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பலவித பொருட்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால், அவற்றை இப்போது வாங்க உங்களுக்கு அவசியமிருக்காது என நினைக்கிறோம். ஆம், இயற்கையாகவே கற்றாழையை பயன்படுத்தி உங்களுடைய முடியை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி என்பதை இப்போது நாம் காணலாம்.

கற்றாழை மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை

use of aloe vera

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 1 கப்
  • கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்

தயாரிப்பது எப்படி?

  • ஹேர் மாஸ்க் செய்வதற்கு, இரவே 1 கப் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்கவும்
  • அடுத்த நாள், மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்
  • அதோடு, 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும்
  • மார்க்கெட்டில் கற்றாழை ஜெல்லை நம்மால் வாங்க முடியும். இல்லையெனில், வீட்டிலேயே நாம் தயாரித்துக்கொள்ளலாம்
  • இவற்றை கலந்துக்கொள்ளவும்
  • அவ்வளவு தான் மாஸ்க் ரெடி

பயன்படுத்துவது எப்படி?

use of aloe vera

  • பிரஷ் உதவியுடன் இந்த மாஸ்க்கை முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும்
  • அதன்பிறகு, முடியை சீவ மறவாதீர்
  • பின்னர் ஷவர் தொப்பி உதவியுடன் தலையை கவர் செய்யவும்
  • 1 மணி நேரம் கழித்து முடியை மிதமான ஷாம்பு கொண்டு அலசவும்
  • இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்
  • ஒரு மாதத்திற்குள் நல்ல பலனை உங்களால் காண முடியும்

அற்புதம் செய்யும் நெல்லிக்காய் மற்றும் கற்றாழை

use of aloe vera

நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் ஆக்சிஜனேற்ற பண்பு அதிகமுள்ளது. இது முடி உதிர்வை தடுக்கும். மேலும், முடியின் நிறத்திற்கும் உதவுகிறது. எனவே, நெல்லிக்காய் மற்றும் கற்றாழை இரண்டும் நம்முடைய முடியை அடர்த்தியாக்க உதவும்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் (நசுக்கியது) - 1 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்

தயாரிப்பது எப்படி?

  • ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் நசுக்கிய நெல்லிக்காயையும், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் எடுத்துக்கொள்ளவும்
  • ஸ்பூன் உதவியுடன் இதனை நன்றாக கலந்துக்கொள்ளவும்
  • அவ்வளவு தான், நம் முடியில் மேஜிக் செய்ய ரெசிபி ரெடியாகிவிட்டது

பயன்படுத்துவது எப்படி?

  • இந்த பேஸ்டை முடியில் தடவவும்
  • பிறகு ஷவர் தொப்பி கொண்டு தலையை மூடவும்
  • அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்
  • இந்த பேஸ்டை வாரத்திற்கு 3 முதல் 4 முறை பயன்படுத்தலாம்

முடியில் கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

use of aloe vera

  • உங்கள் முடி சுருட்டையாக இருந்தால் கற்றாழை பயன்படுத்தலாம்
  • முடி உலர்ந்து போய் இருப்பது போன்ற பிரச்சனைக்கும் கற்றாழை உதவுகிறது
  • நீண்ட கூந்தலை பெறவும் கற்றாழை காரணமாக உள்ளது
  • உங்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்களும் கற்றாழை பயன்படுத்தி பயனடையலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP