ஸ்டார்ட் மியூசிக் ஷோ மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே
sreeja kumar
15-03-2023, 13:02 IST
www.herzindagi.com
பிரியங்கா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆஸ்தான ஆங்கர் பிரியங்கா தற்போது மீண்டும் ஸ்டார்ட் மியூசிக் ஷோ சீசன் 4ஐ தொகுத்து வழங்கவுள்ளார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
Image Credit : google
விஜய் டிவி
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஆங்கராக இருந்து வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே
Image Credit : google
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடங்கி பிக் பாஸ் ஜோடிகள், ஓ சொல்றீயா ஓஒ சொல்றீயா போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார். அதே போல் பிரியங்கா தொகுத்து வழங்கும் முக்கியமான நிகழ்ச்சியில் ஸ்டார் மியூசிக்கும் ஒன்று.
Image Credit : google
மாகாபா
பிக் பாஸ் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவருக்கு பதில் மாகாபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின்பு 3வது சீசனுடன் ஸ்டார்ட் மியூசிக் ஷோ முடிக்கப்பட்டது.
Image Credit : google
புதிய புரமோ
இந்நிலையில் ரசிகர்களின் ஃபேவரெட் நிகழ்ச்சியான ஸ்டார் மியூசிக் சீசன் 4 தற்போது டெலிகாஸ்ட் ஆகவுள்ளது. நிகழ்ச்சியின் ஆங்கர் பிரியங்கா என்பது புரமோ மூலம் உறுதியாகியுள்ளது. புரமோவில் கவுன்டர்மணி பாடலுடன் பிரியங்கா என்ட்ரி கொடுகிறார்.
Image Credit : google
ரசிகர்கள் ஹேப்பி
இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இதுக் குறித்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். பிரியங்கா இறங்கி கலக்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.