டிஆர்பி-யில் முதல் 5 இடங்களில் உள்ள ஜீ தமிழ் சீரியல்களின் லிஸ்ட்!
Alagar Raj AP
03-04-2024, 17:45 IST
www.herzindagi.com
கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தின் டிஆர்பி வெளியாகியுள்ளது. அதில் முதல் 5 இடங்களை பிடித்த ஜீ தமிழ் சீரியல்களின் பட்டியலை பார்ப்போம்.
ஐந்தாம் இடம் - வீரா
சில வாரங்களுக்கு முன்பே ஒளிபரப்பாக தொடங்கிய வீரா சீரியல் 2.93 டிஆர்பி ரேட்டிங்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நான்காம் இடம் - நினைத்தாலே இனிக்கும்
அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் பரபரப்பாக போகும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.33 டிஆர்பி ரேட்டிங்குடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மூன்றாம் இடம் - சந்தியா ராகம்
இந்த பட்டியலில் 3.96 டிஆர்பி ரேட்டிங்குடன் சந்தியா ராகம் சீரியல் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடம் - அண்ணா
ஒவ்வொரு எபிசோடும் சரவெடியான கதைக்களத்தை கொண்ட அண்ணா சீரியல் 4.46 ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடம் - கார்த்திகை தீபம்
ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அனல் பறக்கும் எபிசோட்களை கொண்ட கார்த்திகை தீபம் சீரியல் 5.01 ரேட்டிங் பெற்று மக்கள் ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளது.