தூய்மையான கலப்படமில்லா தேன் தானா என்பதை கண்டறிய 6 டிப்ஸ்
Alagar Raj AP
19-12-2024, 19:01 IST
www.herzindagi.com
தூய்மையான கலப்படமில்லா தேன் என்று உங்களிடம் விற்கப்படும் தேன், தூய்மையான தேன் தானா என்பதை கண்டறிய இந்த 6 சோதனைகளை செய்து பாருங்கள்.
நீர் சோதனை
ஒரு ஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பாருங்கள். தூய்மையான தேன் தண்ணீரில் எளிதில் கரையாது, கீழே தேங்கிவிடும். அதுவே கலப்படம் செய்யப்பட்ட தேன் தண்ணீரில் எளிதில் கரைந்துவிடும்.
வெப்ப சோதனை
பருத்தி பஞ்சை தேனில் முக்கி நெருப்பில் வைக்கவும். தூய்மையான தேன் நெருப்பில் எளிதில் எரியும். அதுவே கலப்படமான தேன் நெருப்பில் எரிய கூடுதல் நேரம் எடுக்கும்.
விரல் சோதனை
உங்கள் கட்டை விரலால் தேனை எடுக்கவும், தூய்மையான தேன் அடர்த்தியாக இருக்கும் என்பதால் விரலில் இருந்து வழியாமல் அப்படியே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் விரலில் இருந்து வழிந்துவிடும்.
காகித சோதனை
சில துளி தேனை காகிதத்தில் வைத்து பாருங்கள். தூய்மையான தேனை காகிதம் எளிதில் உறிஞ்சாது. அதுவே கலப்படம் செய்யப்பட்ட தேனின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்பதால் காகிதம் தேனை எளிதில் உறிஞ்சிவிடும்.
நிறம்
துமையான தேன் செழுமையான தங்க அல்லது அம்பர் நிறத்தில் இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் வெளிப்படைத்தன்மையாக வெளிர் நிறத்தில் இருக்கும்.
வாசனை
தூய்மையான தேனில் மென்மையான மலர் நறுமணம் இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட மிகக் குறைந்த மணம் கொண்டதாகவோ அல்லது சர்க்கரை பாகு நறுமணத்துடன் இருக்கும்.