கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
Alagar Raj AP
23-04-2025, 18:21 IST
www.herzindagi.com
கர்ப்பத்தின் முதல் மாதம்
கர்ப்பம் தரித்து சில நாட்கள் வரை பல பெண்கள் தான் கர்ப்பமாக இருப்பதையை உணர்வதில்லை. ஆனால் அத்தகைய நிலையில் பெண்ணின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.
மார்பகங்களில் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தில் மார்பகங்களில் உணர்திறன், வீக்கம் மற்றும் வலி அதிகரிக்கும். மேலும் முலைக்காம்புகளின் நிறம் கருமையாகி அப்பகுதியில் கூச்ச உணர்வு அதிகரிக்கும்.
அடிவயிற்றில் வலி
கரு கருப்பையில் உருவாகும் போது அடிவயிற்றில் வலியை உணர முடியும்.
தலைவலி
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக தலைவலி அதிகரிக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
கர்ப்பிணிக்கு கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வாசனை திறன் அதிகரிக்கும்
அதே போல் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, கர்ப்பிணியின் வாசனை திறன் முதல் மாதத்தில் அதிகரிக்கும்.
லேசான இரத்தப்போக்கு
கர்ப்பம் தரித்த பின் மாதவிடாய் நின்றாலும், மாதவிடாய் சுழற்சி காரணமாக ஹார்மோன்கள் இரத்தப்போக்கை தூண்டும். இதனால் கர்ப்பத்தின் முதல் மாதத்தில் லேசான இரத்தப்போக்கு ஏற்படலாம். இரத்தப்போக்கு வரும் வாரங்களில் நின்றுவிடும்.
வாந்தி, மயக்கம்
கர்ப்பத்தின் முதல் மாதத்தில் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் காலையில் அதிகம் ஏற்படும்.