உங்கள் குழந்தையின் அழகான கையெழுத்திற்கு 5 சிம்பிள் டிப்ஸ்
S MuthuKrishnan
05-07-2024, 18:10 IST
www.herzindagi.com
டிப்ஸ் 1
குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக எழுதுவதற்கு பென்சில்கள் உதவுவதால் பேனாக்களைவிட பென்சில்கள் பயன்படுத்துவது நல்லதாகும். மேலும் இது காகிதங்களை வீணாக்காமல் சேமிக்கிறது.
Image Credit : freepik
பென்சில்களில் எழுதுவது அளிக்கக் கூடியவை மற்றும் குழந்தைகள் பயன்படுத்த பாதுகாப்பானவை. கூர்மையான பேனாக்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் பென்சில்களால் எழுதும்போது கையெழுத்து அழகாகும்.
Image Credit : freepik
டிப்ஸ் 2
வீட்டில் மைதா சோள மாவு கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை அகலமான தட்டில் வைத்து பிள்ளைகளை எழுத பழக்கலாம். இதனால் குழந்தைகளின் கைகளுக்கு நெகிழ்வு தன்மை கிடைக்கும்.
Image Credit : freepik
டிப்ஸ் 3
தினமும் எழுதிப் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்து மேம்படுவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும்.
Image Credit : freepik
குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று குழந்தைகளை நிர்பந்திக்க கூடாது இதனால் அவசர அவசரமாக எழுதும் மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவர்.
Image Credit : freepik
டிப்ஸ் 4
குழந்தைகளிடம் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சிலை கொடுத்து பேப்பர்களில் படம் வரைந்து வண்ணம் தீட்ட சொல்லுங்கள் இப்படி செய்வதன் மூலம் அவர்கள் எழுத்துக்களை சீராக எழுத உதவும்.
Image Credit : freepik
டிப்ஸ் 5
உல்லன் நூலை கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்க சொல்லலாம் கெட்டியான அட்டையில் சிறு துளைகள் போட்டு அதில் நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.