மாதவிடாய் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எத்தனை பேட் மாற்ற வேண்டும்? எவ்வளவு நேரத்தில் மாற்றலாம்?
G Kanimozhi
30-07-2025, 17:22 IST
www.herzindagi.com
ஒரு நாளில் எத்தனை முறை பேட் மாற்ற வேண்டும்?
மாதவிடாய் காலத்தில் இரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்குள் பேடை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
காட்டன் பேட்
சந்தையில் நறுமணம் சேர்க்கப்பட்ட செயற்கை இழைகளால் (சிந்தெட்டிக்) செய்யப்பட்ட பேட்கள் உள்ளது. இவற்றில் வாசனையற்ற காட்டன் பேட்களை பயன்படுத்துவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஏன் பேட் மாற்ற வேண்டும்?
மாதவிடாய் இரத்தத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக பெருகும் சூழ்நிலை உள்ளது. நீண்ட நேரம் ஒரே பேடை அணிந்திருந்தால், அது ஈரப்பதத்தை ஏற்படுத்தி தோல் எரிச்சல், சரும பிரச்சினைகள் மற்றும் யோனி தொற்றுகளை உருவாக்கும்.
அதிக ரத்த போக்கு
மாதவிடாயின் முதல் மற்றும் இரண்டாம் நாளில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால், 3 - 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்ற வேண்டும். இரத்தம் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
கடைசி நாட்களில் பேட்
மாதவிடாயின் கடைசி 2 நாட்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் 6 - 8 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்றினால் போதுமானது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்