2025ல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்


Raja Balaji
10-07-2025, 09:20 IST
www.herzindagi.com

கூலி

    ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேட்டையன், லால் சலாம் வீழ்ச்சியில் இருந்து ரஜினியின் விஸ்வரூபத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

வார் 2

    கூலி படம் வெளியாகும் அதே நாளில் வார் 2 வெளியாகிறது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் வில்லனாக நடித்துள்ளார்.

மதராஸி

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேகன் நடிக்கும் மதராஸி படம் செப்டம்பர் மாத ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

இட்லி கடை

    குட் பேட் அக்லியுடன் மோதாமல் அக்டோபர் ரிலீஸிற்கு தள்ளிப்போன இட்லி கடை படத்தை தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

டூட் தீபாவளி

    டிராகன் படத்தை தொடர்ந்து தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறார் பிரதீப் ரங்கநாதன்.

    இதே போல பைசன், பிரபாஸின் ராஜா சாப், மோகன் லாலின் ஹிருதயபூர்வம் படங்களும் 2025ன் மிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படங்களாகும்.