2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்


Alagar Raj AP
03-01-2025, 18:10 IST
www.herzindagi.com

விடாமுயற்சி

    அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, மீண்டும் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

தளபதி 69

    விஜயின் கடைசி படம் என்று கூறப்படும் இன்னும் பெயரிடப்படாத தளபதி 69 திரைப்படம் அரசியல் படமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிபடும் பேச்சுக்கள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

கூலி

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும், பான் இந்தியா படமாக உருவாகி படம் கூலி படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தக் லைஃப்

    நாயகன் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்துள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே இருக்கிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இட்லி கடை

    ராயன் படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் இட்லி கடை என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ராயன் படத்தை போல் இப்படமும் வசூலில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.

ரெட்ரோ

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு இப்படம் கம்பேக் படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

எஸ்கே 23

    சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அஜித், விஜயகாந்த், விஜய்க்கு வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் எஸ்கே ரசிகர்கள்.