வீக் எண்டில் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குடும்ப படங்கள்!


Alagar Raj AP
07-06-2024, 16:36 IST
www.herzindagi.com

சூர்ய வம்சம்

    குடும்ப படங்களின் ஸ்பேசியலிஸ்ட்டான விக்ரமன் இயக்கத்தில் விக்ரம், தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த சூர்ய வம்சம் எவர் கிரீன் குடும்ப படங்களில் ஒன்று.

விரலுக்கேத்த வீக்கம்

    குடும்பப் பின்னணி கொண்ட படங்களுக்கு 90களில் பெயர் பெற்ற இயக்குனர் வி. சேகர். இவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம் படத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்பதை நகைச்சுவை கலந்து காண்பித்திருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம்

    குடும்ப செண்டிமெண்ட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை எதார்த்தமாக கூறியிருப்பார்.

தென்காசிப்பட்டினம்

    பி.வாசு இயக்கத்தில் மலையாள படத்தின் ரீமேக்கான தென்காசிப்பட்டினம் படத்தில் முரட்டு குணம் கொண்ட சகோதரர்களாக இருக்கும் சரத்குமார் மற்றும் நெப்போலியன், ஒரு தங்கை, தங்கையின் காதலன் விவேக் இவர்களுக்குள் கதைப்படி நடக்கும் கலாட்டாவால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

சமுத்திரம்

    படத்தில் சகோதரர்களான சரத்குமார், முரளி, மனோஜ் மூவருக்கும் ஒரு தங்கை இருக்கிறார். நகைச்சுவையாக கலாட்டாவாக ஆரம்பிக்கும் படம் கிளைமாக்சில் அண்ணன்களுக்கும் தங்கைக்கு நடக்கும் பாசப் போராட்டத்தை எமோஷனலாக காண்பித்திருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.

ஆனந்தம்

    மூத்த அண்ணனான மம்முட்டியும் தம்பிகளாக இருக்கும் முரளி, அப்பாஸ், ஷியாம் கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். அண்ணன் தம்பி இடையே இருக்கும் அன்பு பாசத்தை உணர்த்திய ஒரு திரைப்படம். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருப்பர் லிங்குசாமி.

முத்துக்கு முத்தாக

    இந்த படம் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். பெற்றோரின் முதுமை காலத்தில் அவர்களை பாத்துக்கிறது ஒவ்வொரு பிள்ளைகளோட கடமை என கிளைமாக்சில் அழுத்தமாக கூறியிருப்பார் இயக்குனர் ராசு மதுரவன்.