அஜித் குமாரின் அண்டர் ரேட்டெட் மூவிஸ் எது தெரியுமா?
Balakarthik Balasubramaniyan
01-05-2023, 15:31 IST
www.herzindagi.com
என்னை அறிந்தால்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம், கடத்தல் மாஃபியாக்களை மையமாக கொண்டது. முதல் பாதி கவுதம் மேனன் பட பாணியிலும், இரண்டாம் பாதி டாப் கியரிலும் செல்லும்.
Image Credit : google
கிரீடம்
அஜித்குமார், திரிஷா நடிப்பில் வெளிவந்த கீரிடம், கலவையான விமர்சனங்களை பெற்றது. காரணம், இந்த படத்தின் கிளைமேக்ஸ் தான். குடும்பத்தோடு பார்க்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்தது கிரீடம்.
Image Credit : google
பில்லா 2
பிளாக்பஸ்டர் படமாக அமைந்த பில்லாவின் இரண்டாம் பாகத்தை சாக்ரி டோலெட்டி இயக்கினார். இந்த படத்தின் பல சண்டை காட்சிகளுக்கு டூப் போடாமல் அஜித் நடித்தார். சாதாரண அகதியான டேவிட் பில்லா எப்படி டான் ஆனார் என்பதை இரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருப்பார் இயக்குனர்.
Image Credit : google
அவள் வருவாளா
அஜித், கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுஜாதா என ஒரு பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. காமெடி குடும்ப திரைப்படமாக இது இருந்தது. பப்லு (பிரித்திவிராஜ்) வில்லன் கதாபாத்திரத்தில் சிம்ரனை மிரட்டி இருப்பார் எனலாம்.
Image Credit : google
அட்டகாசம்
அஜித் தூத்துக்குடி தாதாவாக நடித்த படம் இது. இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் காமெடி காட்சிகள் பெரிதும் பேசப்பட்டாலும், படம் ஏனோ சென்று சேரவில்லை.
Image Credit : google
முகவரி
அஜித் குமார் நன்றாக நடித்தும், கதை தொய்வின் காரணமாக பேச மறக்கப்பட்ட படம் இது. இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
Image Credit : google
உல்லாசம்
அஜித் குமாருடன் விக்ரமும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார். மகேஸ்வரி ஹீரோயினாக நடித்திருப்பார். காதல் கதையான இதனை ‘லெஜெண்ட்’, ‘விசில்’ படங்களை இயக்கிய ஜே.டி. ஜெர்ரி தான் இயக்கினார்.
Image Credit : google
வாழ்த்துக்கள் ‘தல’
தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமார், பல தடைகளை வலிமை கொண்டு உடைத்தெறிந்து, துணிவுடன் இன்றுவரை போராடி கொண்டிருக்கிறார். அவருக்கு ஹெர்சிந்தகி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.