யாரெல்லாம் கீரை சாப்பிடக் கூடாது தெரியுமா ?


Shobana Vigneshwar
05-10-2023, 20:00 IST
www.herzindagi.com

கீரை தீமைகள்

    கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இருப்பினும் ஒரு சிலருக்கு கீரை உகந்ததல்ல, யாரெல்லாம் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை இன்றைய பதிவில் காணலாம்…

Image Credit : freepik

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள்

    சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரை சாப்பிடுவதால் உடலில் ஆக்சாலிக் ஆசிட் அதிகரிக்கலாம், இது சிறுநீரக பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம்.

Image Credit : freepik

மூட்டு வலி உள்ளவர்கள்

    கீரையில் அதிக அளவு ப்யூரின் எனும் சேர்மம் உள்ளது. ஆக்சாலிக் ஆசிட் மற்றும் ப்யூரின் இணைந்து மூட்டு வலியை ஏற்படுத்துகின்றன.

Image Credit : freepik

சிறுநீரக கற்கள் உடையவர்கள்

    சிறுநீரகங்களில் தேங்கும் கால்சியம் ஆக்சலேட்களால் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களும் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image Credit : freepik

மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்

    இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் கீரையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின் A மருந்துகளுடன் இணைந்து இடையூறுகளை ஏற்படுத்தலாம்.

Image Credit : freepik

அலர்ஜி உள்ளவர்கள்

    கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஹிஸ்டமைன் உள்ளது. இது உடலின் சில செல்களில் காணப்படும் ஒருவித ரசாயனமாகும். இதன் காரணமாக ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.

Image Credit : freepik

அளவோடு எடுத்துக் கொள்ளவும்

    ஒரே சமயத்தில் கீரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களும் கீரைகளை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வது நல்லது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik