நீங்கள் பி சி ஓ எஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களா? அப்படி என்றால் இந்த உணவுகளை மறந்தும் தொடாதீர்கள்.
S MuthuKrishnan
17-06-2024, 07:50 IST
www.herzindagi.com
சர்க்கரை
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் வானங்கள் இன்சுலின் அளவை அளவை அதிகரிக்கச் செய்யலாம். எனவே சர்க்கரை நிறைந்த பொருட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Image Credit : freepik
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
பிசிஓஎஸ் நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான பதப்படுத்தப்பட்ட ரொட்டி, பேஸ்ட்ரிகள், வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட்ரிகள் போன்றவை தவிர்க்க வேண்டும்.
Image Credit : freepik
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் போன்றவை PCOS இன் அறிகுறிகளை மோசமாக்கும்.
Image Credit : freepik
பால் பொருட்கள்
PCOS உள்ள சில பெண்களுக்கு, பால் அல்லது பால் பொருட்களை உட்கொள்வது முகப்பரு போன்ற அறிகுறிகளை உருவாக்கும். இது ஹார்மோன் அளவை பாதிக்கிறது மற்றும் ஆண்ட்ரோஜன் அளவை அதிகரிக்கிறது.
Image Credit : freepik
இறைச்சி
ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியன கொழுப்புகள் அதிகம். இது உடலில் வீக்கத்தை அதிகரித்து PCOS அறிகுறிகளை மோசமாக்கும்.
Image Credit : freepik
வறுத்த உணவுகள்
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஃப்ரைடு சிக்கன், டோனட்ஸ் போன்ற வறுத்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இது வீக்கம் மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
Image Credit : freepik
சோயா
சோயா ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து தைராய்டு செயல்பாட்டை பாதிக்கிறது. PCOS உள்ள பெண்களுக்கு இது மிகவும் சிக்கலாக இருக்கும். டோஃபு, சோயா பால் போன்றவற்றை தவிர்க்கவும்.
Image Credit : freepik
டிரான்ஸ் கொழுப்புகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிஸ்கட்களில் டிரான்ஸ் ஃபேட் அதிகம் உள்ளது. PCOS உள்ளவர்களுக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
Image Credit : freepik
காஃபி
குறைவான காஃபி எடுத்து கொள்வது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியான காஃபி எடுப்பது ஹார்மோன் அளவையும் மன அழுத்தத்தையும் பாதிக்கும் மற்றும் PCOS அறிகுறிகளை மோசமாக்கும்.