பாதங்கள் நம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், ஏனென்றால் நாம் நம் கால்களை பல இடங்களில் வைக்கும் போது, நமது கால்களின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
கால்களில் பாக்டீரியா
தூங்குவதற்கு முன் பல் துலக்குவது போன்று கால்களை கழுவுவதும் அவசியம். ஏனெனில் கால்களில் உள்ள பாக்டீரியா பல நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
பூஞ்சை தொற்று
என்னதான் கால்களில் செருப்பு , ஷூ அணிந்திருந்தாலும் கால்களில் சுரக்கும் வியர்வையில் அழுக்கு மற்றும் தூசிகள் ஒட்டிக் கொள்ளும் போது ஏற்படும் கிருமிகளால் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தோல் பாதிப்பு
கால்களில் உள்ள பாக்டீரியா பாதங்களில் தோல் வறட்சி, ஒவ்வாமை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் கால்களில் அரிப்பு, சிவத்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகி உங்கள் தூக்கம் பாதிக்கும்.
துர்நாற்றம்
கால்களில் உள்ள வியர்வை மற்றும் அழுக்கு பாக்டீரியாக்கள் செழித்து வளரும் சூழலை உருவாக்கும். இதன் விளைவாக கால்களில் துர்நாற்றம் ஏற்படும். இது உங்களுக்கு படுக்கையில் சங்கடமான நிலையை உருவாக்கும்.
நீரிழிவு நோயாளிகள்
கால்களை பொறுத்தவரை நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காலில் பூஞ்சை தொற்று அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுவது கால்களில் உங்கள் நீரிழிவு பாதிப்பை மோசமாக்கும்.
நோய் தொற்று
கால்களை நீங்கள் கழுவாமல் படுக்கும் போது பாதங்களில் உள்ள கிருமிகள் உங்கள் படுக்கையில் பரவும். அப்படி பரவும் கிருமிகள் உங்கள் படுக்கையை இனப்பெருக்கக் களமாக மாற்றும். இதனால் அந்த படுக்கையை பயன்படுத்துபவர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது.
கால்களைக் கழுவுங்கள்
வெதுவெதுப்பான நீரில் கால்களை சோப்பு போட்டு கழுவுவதால் வியர்வை, தூசி, கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழியும். கால்களை கழுவிய பின் ஈரத்தை நன்றாக உலர்த்திய பின் படுக்கைக்கு செல்லுங்கள்.