பல் கூச்சத்தை போக்க இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
Alagar Raj AP
16-10-2024, 17:57 IST
www.herzindagi.com
தேன்
ஒரு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளிக்கவும். தேனின் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல் கூச்சத்தை குணப்படுத்தும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் வாயை நன்றாக கொப்பளித்தால் பாதிப்பு குறையும். க்ரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல் கூச்சத்தை போக்கி, ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
கிராம்பு
கூச்சம் உள்ள பல்லில் ஒரு கிராம்பை எடுத்து வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ள கிராம்பு பல் கூச்சத்தை தற்காலிகமாக போக்கும்.
பூண்டு
பூண்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொற்று மற்றும் வீக்கத்தை குறைத்து பல் கூச்சத்தை குறைக்கும். இதற்கு பூண்டு பேஸ்ட்டை பற்களில் பயன்படுத்தலாம்.
உப்பு
வெதுப்பான நீரில் உப்பு கலந்து வாயை கொப்பளிப்பது சிறந்த பலனை தரும். இதனால் ஈறு மந்த நிலையால் ஏற்படும் பல் கூச்சம் குணமாகும்.
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் மஞ்சளை கலந்து வாயை சுத்தம் செய்யுங்கள். கடுகு எண்ணெய் ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் பல் கூச்சத்தை குறைக்க உதவும்.
ஆயில் புல்லிங்
வாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொப்பளிக்கலாம். தேங்காய் எண்ணெய் வாயில் பாக்டீரியாவை அகற்றி பல் கூச்சத்தை குறைக்கும்.