உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க இந்த 6 பழக்கங்கள் தான் காரணம்!


Alagar Raj AP
12-09-2024, 14:32 IST
www.herzindagi.com

மன அழுத்தம்

    மன அழுத்தம் தொடர்ச்சியாக அதிகரிக்க அது உங்களை மோசமான நிலைக்கு தள்ளும். எனவே உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் பழக்கங்களை இங்கே காண்போம்.

தூக்கமின்மை

    குறைவான நேரம் தூங்குவது மன அழுத்தத்தை மோசமாக்கும். இதனால் உங்கள் மனதை கையாள்வது கடினமாக இருக்கும். எனவே தேவையான நேரம் தூங்கவும்.

அதிகமாக சிந்திப்பது

    அதிகமாக சிந்திப்பது மற்றவர்களை விட மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் குழப்பமான மனநிலையே நிலவும் என்பதால் அதிகம் சிந்திக்க வேண்டாம்.

மோசமான உணவு முறை

    சாப்பிடாமல் இருப்பது, அதிக சர்க்கரை அல்லது துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற மோசமான உணவு பழக்கங்கள் உடலை சோர்வாக உணர செய்து மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

தனிமை

    சமூக வாழ்விலிருந்து விலகி தனியாக இருப்பது குறிப்பிட்ட காலத்திற்கு நிம்மதியாக இருந்தாலும் போக போக அதுவே உங்கள் மனநிலையை மோசமாக பாதிக்கும்.

செயலற்ற வாழ்க்கை முறை

    உடற்பயிற்சி, விளையாட்டு, பொழுதுபோக்கு இது எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் செயலற்று சும்மா இருப்பது மனநிலையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஆபாச படங்கள்

    போதைப் பழக்கத்தை போலவே, ஆபாச படங்கள் பார்ப்பதிலும் அடிமையாக இருப்பது மன அழுத்தத்தின் விளைவுகளை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.