மணிக்கணக்கில் மொபைலில் கடலை போட்டால் ஏற்படும் விளைவுகள்


Alagar Raj AP
25-01-2025, 08:38 IST
www.herzindagi.com

    மணிக்கணக்கில் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை போல் மணிக்கணக்கில் மொபைலில் பேசுவதாலும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

மன அழுத்தம்

    அதிக நேரம் மொபைலில் உரையாடுவது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மன சோர்வை ஏற்படுத்தும்.

காது எரிச்சல்

    தொலைபேசியை காதுக்கு அருகில் நீண்ட நேரம் வைத்திருக்கும் போது தொலைபேசி சூடாகும். இதனால் காதில் அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும்.

கதிர்வீச்சு வெளிப்பாடு

    மொபைலில் வெளிப்படும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சு உடல் வெப்பநிலையை உயர்த்தும். இதன் விளைவாக தலைவலி, மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனச்சிதறல்

    நடக்கும் போது, வாகனம் ஓட்டும் போது அல்லது வேறேதும் வேலைகளை செய்யும் மொபைலில் பேசுவது கவனச்சிதறலை ஏற்படுத்தும். இதனால் விபத்துகள் அல்லது வேலையில் தவறுகள் உண்டாகும்.

இரத்த அழுத்தம்

    ஒரு வாரத்தில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மொபைலில் பேசுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தக்கன வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

செவி திறன் பாதிப்பு

    நீண்ட நேரம் மொபைல் போனில் பேசுவதால் செவி திறன் பாதித்து காது கேளாமல் போகலாம்.