அடிக்கடி சிக்கன் சாப்பிடுபவர்கள் இதை ஒருமுறை படிங்க
Alagar Raj AP
27-12-2024, 16:42 IST
www.herzindagi.com
சிக்கன் பக்க விளைவுகள்
மாதத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு ஒரு முறை என சிக்கன் சாப்பிட்ட வழக்கம் மறைந்து தற்போது பலருக்கு தினமும் சிக்கன் சாப்பிடுவது வழக்கமாக மாறிவிட்டது. இப்படி அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்ப்போம்.
இதய நோய்
சிக்கன் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதன் விளைவாக இதய நோய்களில் அபாயம் உள்ளது.
உடல் எடை அதிகரிப்பு
மனிதர்களுக்கு தினமும் 10 முதல் 35 சதவீதம் புரதம் தேவைப்படுகிறது. ஆனால் சிக்கன் புரதம் நிறைந்த உணவு என்பதால், அதை அடிக்கடி அதிகம் சாப்பிடுவதால் உடலில் புரதம் அதிகரித்து கொழுப்பாக சேரும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும்.
உடல் வெப்பம் அதிகரிக்கும்
பொதுவாக புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணும் போது உடல் அதை ஜீரணிக்க அதிக சிரமப்படும். இதனால் உடல் தெர்மோஜெனிக் விளைவுக்கு பங்களித்து உடல் வெப்பத்தை அதிகரிக்கும். குறிப்பாக கோடை காலத்தில் இதனால் காய்ச்சல், ஜலதோஷம், அம்மை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உயர் இரத்த அழுத்தம்
கோழி இறைச்சியில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக உள்ளது. இது இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி, இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும்
கோழி இறைச்சி அதிகம் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக கீல்வாதம், சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
சிறுநீர்ப்பாதை தொற்று
அடிக்கடி கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் மத்தியில் UTI எனப்படும் சிறுநீர்ப்பாதை தொற்று அதிகரித்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.