விக்கல் எப்ப வரும், எப்படி வரும்னு தெரியுமா?


Alagar Raj AP
22-03-2025, 09:38 IST
www.herzindagi.com

விக்கல்

    நமக்கு விக்கல் வரும் போது 'உன்ன யாரோ மிஸ் பண்றங்கனு' நம்மிடம் யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். இது நகைச்சுவையாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் விக்கல் ஏன் வருகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா?

உதரவிதானம் தசை

    உதரவிதானம் என்பது மார்பையும் வயிற்றையும் இணைக்கும் தசை பகுதி ஆகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது.

சுருங்கிய உதரவிதானம்

    சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகளால் உதரவிதானம் எரிச்சலடையும். இதனால் உதரவிதானம் திடீரென்று சுருங்கிவிடும். அந்நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்று அதன் குறுகிய இடைவெளியில் நுரையீரல்களுக்குள் சென்று வரும் போது ‘விக்... விக்...' என்ற ஒலியுடன் விக்கல் வருகிறது.

காரமான அல்லது சூடான உணவுகள்

    காரமான அல்ல சூடான உணவுகளை சாப்பிடும் போது மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சலடைய செய்து விக்கலை ஏற்படுத்தும்.

வேகமாக சாப்பிடுவது

    உணவை வேகமாக விழுங்கும் போது மார்புப் பகுதியில் உள்ள நரம்புகளால் உதரவிதானம் எரிச்சலாகும். இதன் விளைவாக விக்கல் வரும்.

நீர்ச்சத்து குறைபாடு

    உடலில் நீர்ச்சத்து குறையும் போது மார்பு பகுதி வறண்டு அங்குள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சலாக்கும். இதுவும் விக்கல் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

நோய் அறிகுறிகள்

    இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது சிறுநீரக நோய், நரம்பியல் நோய், அல்சர் போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

விக்கலை நிறுத்த வழிகள்

    மூச்சை நன்றாக இழுத்து பிடிக்கும் போந்து விக்கல் நின்றுவிடும் அல்லது வேகமாக தண்ணீர் குடிக்கும் போது விக்கல் நின்றுவிடும்.