பயணத்தின் போது கடுமையான தலைவலியா? இதை செய்யுங்க தலைவலி ஓடிரும்
Alagar Raj AP
19-11-2024, 18:53 IST
www.herzindagi.com
பயண தலைவலி
மோஷன் சிக்னஸ், சோர்வு, தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணிகளால் பயணத்தின் போது தலைவலி ஏற்படும். இதை சமாளிக்க சில வழிகள் இதோ.
இஞ்சி டீ
இஞ்சி டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையில் இயற்கையான ஓபியேட்டுகளை செயல்படுத்துகிறது. இதனால் தலைவலி குறையும்.
இயற்கையான காற்று
சிலருக்கு நெரிசலில் காற்றோட்டம் இல்லாமல் பயணித்தால் தலைவலி உண்டாகும். அப்படியான நபர்கள் ஜன்னல் ஓரத்தில் காற்றோட்டமாக உட்கார்ந்தால் தலைவலி குறையும்.
நட்ஸ்
பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் சாப்பிட்டால் தலைவலி குறையும். ஏனெனில் இவற்றில் தலைவலியை போக்க உதவும் மெக்னிசியம் உள்ளது.
நீரேற்றம்
பயணத்தின் போது தலைவலிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நீரிழப்பு. எனவே பயணத்தில் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏர் ஃப்ரெஷனர்
கார் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஏர் ஃப்ரெஷனரின் கடுமையான வாசனை சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். அப்படியானவர்கள் ஏர் ஃப்ரெஷனர் பயன்படுத்துவதை தவிருங்கள்.
ஓய்வு
பயணத்தில் கடுமையான தலைவலி இருந்தால் கட்டாயம் ஓய்வெடுப்பது அவசியம். ஓய்வு மனநிலையை மேம்படுத்தி தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.