கழுத்து மற்றும் தலை வலி இணைந்து வருவதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்
Abinaya Narayanan
04-04-2025, 13:56 IST
www.herzindagi.com
நீரிழப்பு
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தலை மற்றும் கழுத்தின் தசைகளில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கடுமையான வலி அனுபவிக்கலாம்.
Image Credit : freepik
தவறான நிலையில் தூங்குவது அல்லது உட்காருவது
சில நேரங்களில் இரவில் தவறான நிலையில் தூங்குவது கழுத்து மற்றும் தலை வலியை ஏற்படுத்தும். இது தவிர மடிக்கணினிகளை தலையை குனிந்து பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
Image Credit : freepik
மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி குறைபாடு
உடலில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி குறைபாடு இருந்தால் தலைவலி மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
Image Credit : freepik
தசை இறுக்கம்
சில நேரங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது கழுத்து தசைகளில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ஒருவருக்கு தலை மற்றும் கழுத்தில் ஒரே நேரத்தில் வலி ஏற்படலாம்.
Image Credit : freepik
நோய் தொற்று
மாறும் வானிலை காரணமாக உடலில் தொற்று மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தலை மற்றும் கழுத்தில் ஒரே நேரத்தில் வலி ஏற்படலாம்.
Image Credit : freepik
அதிக மன அழுத்தம்
பல நேரங்களில் வீடு மற்றும் அலுவலக பிரச்சனை காரணமாக அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்கிறோம், இது நமது மன ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தலைவலி மற்றும் கழுத்து வலி பிரச்சனை ஏற்படக்கூடும்.
Image Credit : freepik
தலைவலி மற்றும் கழுத்து வலியை குறைக்க வழிகள்
சரியான நிலையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். அதேபோல் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.