உணவுடன் அல்லது உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்படுமா? இதற்கான விடையை பதிவில் காணலாம் வாருங்கள்…
Image Credit : freepik
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின்படி உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமானத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும். இது செரிமான சாறுகளின் உற்பத்தியையும் பாதிக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Image Credit : freepik
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஆயுர்வேதத்தின் படி சாப்பிட்ட அடுத்த 30 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
Image Credit : freepik
அறிவியல் என்ன சொல்கிறது?
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், ஆயுர்வேதத்தின் இந்த கருத்துக்களை மறுக்கிறார்கள். இவர்களின் கருத்துப்படி உணவிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பதே சிறந்தது.
Image Credit : freepik
உணவிற்குப் பிறகு தண்ணீர்
சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இது குடல் இயக்கத்தையும் எளிதாக்கும்.
Image Credit : freepik
செரிமான சாறுகள்
நிபுணர்களின் கருத்துப்படி உணவிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால் செரிமான சாறுகளின் உற்பத்தி பாதிக்கப்படுவதில்லை. மாறாக இது இன்சுலின் உற்பத்திக்கும் இரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது.
Image Credit : freepik
சரியா / தவறா
ஆயுர்வேதத்தின்படி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது தவறு என்ற கருத்து நிலவினாலும். பெரும்பாலான மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவிற்கு பிறகு தண்ணீர் குடிப்பது சரியானது என்றே குறிப்பிடுகிறார்கள்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.