உடல் எடையை குறைக்க சரியான முறையை பின்பற்றினால் பக்க விளைவுகளை தடுக்கலாம். உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான சரியான முறையை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கவுர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
Image Credit : freepik
அவசரம் வேண்டாம்
உடல் எடையை வேகமாக குறைப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளை தேர்வு செய்வது நல்லது.
Image Credit : freepik
சரியான டயட்
30 நாட்களுக்கு வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஜங்க் உணவுகள், மைதா மற்றும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.
Image Credit : freepik
டீடாக்ஸ் தண்ணீர்
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம் இதற்கு நிறைய தண்ணீர் குடிப்பதுடன் டீடாக்ஸ் பானத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
பழங்களை சாப்பிடுங்கள்
நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களை காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
Image Credit : freepik
நல்ல தூக்கம் அவசியம்
உடலின் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ளவும், செரிமான செயல்முறை சரியாக நடைபெறவும் தினமும் குறைந்தது 6-8 மணி நேரங்கள் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Image Credit : freepik
இரவு உணவு
இரவு உணவிற்கு பிறகு உடனே தூங்க செல்வதை தவிர்க்கவும். இரவு உணவை 7-8 மணிக்குள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் யோகா அல்லது உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்க உதவும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.