ஆண்களின் விந்தணுக்கள் இயற்கையாக அதிகரிக்க என்ன செய்யலாம்?


Sanmathi Arun
17-02-2023, 11:48 IST
www.herzindagi.com

விந்தணுக்கள்

    பல ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை(Sperm Count), குறைந்த விந்தணு இயக்கம்(Sperm Motility)மற்றும் அசாதாரணமாக தோன்றும் விந்தணு(Sperm Morphology) அதாவது விந்தணுக்களின் உருவம் (தலை, வால், உடம்பு) வித்தியாசமாக இருப்பது ஆண் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்களாக இருக்கிறது.

Image Credit : freepik

முருங்கை இலை, பூ மற்றும் பிசின்

    வாரம் இருமுறை முருங்கை கீரை சூப், முருங்கை பூவை பாலில் கொதிக்க வைத்து அல்லது கூட்டாக செய்து கொடுங்கள் .மேலும் முருங்கை பிசின் பொடியை தேனில் அல்லது வெந்நீரில்கலந்து குடிக்கலாம். இவை அனைத்துமே அணுக்கள் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.

Image Credit : freepik

காலை உணவுடன் நட்ஸ்

    தினசரி காலை உணவுடன் 5 ஊற வைத்த பாதாம் ,1 ஸ்பூன் பூசணி விதை, 1 ஸ்பூன் சூரிய காந்தி விதை, 2 வால்நட்ஸ் ,பேரிச்சம் பழம் - 1 என்று அன்றாட உணவுடன் தொடர்ந்து எடுத்து கொள்வது அணுக்களை அதிகரிக்க பெரிதும் உதவும்.

Image Credit : freepik

வைட்டமின் C உணவுகள்

    வைட்டமின் C அதிகம் நிறைந்த உணவுகளான கொய்யா பழம் நெல்லிக்காய்,ஆரஞ்சு பழம், கிவி, எலுமிச்சை, தக்காளி போன்ற உணவுகளில் தினசரி ஒன்றை தவறாமல் கொடுக்கவும். காலை உணவுடனே தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது மிக சிறந்தது .

Image Credit : freepik

செவ்வாழை பழம்

    செவ்வாழை பழம் கருத்தரிக்க பெரிதும் உதவுகிறது. தினசரி செவ்வாழை தவறாமல் எடுத்து கொண்டாலே அணுக்கள் ஆரோக்கியமாக உருவாகும்.

Image Credit : freepik

பூண்டு

    பூண்டில் செலினியம் நிறைந்துள்ளது, இது குரோமோசோம் உடைப்பைக் குறைத்து விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.தேனில் ஊறிய பூண்டு அல்லது எண்ணையில் வறுக்காத பூண்டு சிறந்தது.

Image Credit : freepik

மீன் எண்ணெய் மாத்திரை

    ஒமேகா 3 சத்துக்கள் ஆரோக்கியமான அணுக்களை உருவாக்க மிக அவசியம் .எனவே மருத்துவர் ஆலோசனை படி மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து கொள்ளலாம்

Image Credit : freepik

சில கூடுதல் குறிப்புகள்

    அதிகப்படியான உடல் சூடு அணுக்களை பாதிக்கும் உடல் சூட்டை குறைப்பது மிக முக்கியம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும். தினசரி ஒரு சிறிய துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவதும் உதவும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இவை அனைத்தும் கருத்தரிக்க நினைக்கும் பெண்களும் எடுத்து கொள்ளலாம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik