பயணத்தின் போது தலை சுற்றல், வாந்தி எடுப்பது போன்ற பாதிப்புகள் மோஷன் சிக்னஸ் எனப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை இதில் தெரிந்து கொள்வோம்.
புதினா நீர்
பயணத்தின் போது ஒரு பாட்டிலில் புதினா நீரை கலந்து எடுத்து செல்லுங்கள். இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். குமட்டல், வயிற்றுக் கோளாறை குறைக்க உதவும்.
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பயணத்தின் போது இதை எடுத்து செல்லலாம். இது மோஷன் சிக்னஸால் ஏற்படும் குமட்டல், வாந்தியை குறைக்க உதவும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை எடுத்து செல்லுங்கள். குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படும் போது எலுமிச்சை பழத்தை முகர்ந்து பார்ப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
துளசி
பயணத்தில் குமட்டல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது துளசியை சாப்பிடுவதால் நன்மை பயக்கும்.
ஆரஞ்சு மிட்டாய்
பயணத்தின் போது தலைசுற்றல் அல்லது குமட்டல் ஏற்பட்டால் ஆரஞ்சு மிட்டாயை சாப்பிடுங்கள். இது வாந்தி வராமல் தடுக்கும்.
கிராம்பு
கிராம்பில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் தலைசுற்றலுக்கு உடனடி தீர்வளிக்கும்.