நலம் தரும் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள் என்றுமே சிறப்பு தான்!
Shobana Vigneshwar
11-09-2023, 18:00 IST
www.herzindagi.com
சிறுதானியங்கள் பயன்கள்
எடையை குறைப்பது முதல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம்…
Image Credit : freepik
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
சிறுதானியங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன.
Image Credit : freepik
உடல் எடையை குறைக்க உதவும்
சிறுதானியங்களில் நார்ச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சிறுதானியங்களை கொண்டு சப்பாத்தி, உப்புமா, பொங்கல், இட்லி, தோசை போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.
Image Credit : freepik
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
சிறுதானியங்களில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், இருதய நோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
குளூட்டன் இல்லாதது
சிறுதானியங்கள் குளூட்டன் உணர்திறன் உள்ளவர்களுக்கு ஏற்றது. கோதுமை மற்றும் குளூட்டன் உள்ள தானியங்களுக்கு மாற்றாக சிறுதானியங்களை பயன்படுத்தலாம்.
Image Credit : freepik
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுடன் ஒப்பிடுகையில் சிறுதானியங்கள் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. இக்காரணத்தினால் சிறு தானியங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.