வெந்தயக் கீரையில் இவ்வளவு நன்மைகளா!!!


Sanmathi Arun
02-01-2023, 22:40 IST
www.herzindagi.com

வெந்தயக் கீரையின் பயன்கள்

    வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது. சலோனி மருத்துவமனையின் பிரபல டாக்டர் வி.கே. ஸ்ரீவஸ்தாவிடமிருந்து வெந்தயக் கீரையின் ஆரோக்கியம் தொடர்பான சில ரகசியங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Image Credit : freepik

கொழுப்பைக் குறைக்கிறது

    பெருந்தமனி தடிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெந்தயக் கீரை கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

Image Credit : freepik

இதயத்திற்கு நல்லது

    வெந்தயக் கீரையைச் சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இது மாரடைப்பு மற்றும் இரத்த உறைவு அபாயத்தையும் குறைக்கிறது.

Image Credit : freepik

இரும்புச்சத்து நிறைந்துள்ளது

    வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

Image Credit : freepik

செரிமானத்தை மேம்படுத்தும்

    வெந்தயக் கீரையைச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கலாம். இது மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

Image Credit : freepik

தாய்ப்பால் அதிகரிக்க உதவும்

    வெந்தயக் கீரை சாப்பிடுவதால் தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதைக் காய்கறியாகவோ அல்லது பூண்டு சேர்த்து வெந்தயக் கீரை குழம்பாகவும் சாப்பிடலாம்.

Image Credit : freepik

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்

    வெந்தய இலைகள் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. இது வகை 1 மற்றும் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது.

Image Credit : freepik

எடையைக் குறைக்க உதவும்

    வெந்தயக் கீரை குளிர்காலத்தில் எடையைக் குறைக்க உதவும். தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி!

    இதுவரை வெந்தயக் கீரை சாப்பிடாமல் இருந்தால், இந்த நன்மைகளைத் தெரிந்து கொண்டு, இப்போதே சாப்பிட ஆரம்பிக்கலாம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்

Image Credit : freepik