உடலில் இரத்தம் வேகமாக அதிகரிக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்


Sanmathi Arun
07-02-2023, 11:44 IST
www.herzindagi.com

ஹீமோகுளோபினின் வேலை

    ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதே இதன் முக்கியமான செயல்பாடு. உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி இங்கு காணலாம்

Image Credit : freepik

இரத்த சோகையின் அறிகுறிகள்

  • சோர்வு
  • மூச்சுத் திணறல்
  • தலைச்சுற்றல்
  • தலைவலி
  • மார்பு வலி
  • இதய பாதிப்புகள்

Image Credit : freepik

சுவரொட்டி

    சுவரொட்டி என்று சொல்ல கூடிய ஆட்டின் மண்ணீரல் வாரம் இரு முறை எடுத்து கொள்ள வேண்டும். இது இரத்ததின் ஹீமோகுளோபின் அளவை வேகமாக அதிகரிக்க செய்து இரத்த சோகையை தீர்கிறது.மேலும் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.

Image Credit : freepik

முருங்கை கீரை

    இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வாரம் 2 - 3 முறை முருங்கை கீரை சூப் செய்து குடிக்கலாம்.

Image Credit : freepik

ABC ஜூஸ்

    ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் ஆகிய இந்த மூன்றும் கலந்த ABC ஜுஸ் பலராலும் விரும்பி குடிக்கப்படுகிறது. இதை குடிப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இரத்த சோகைக்கு மிக சிறந்த ஜுஸ்.

Image Credit : freepik

பேரீச்சம்பழம் மற்றும் கருப்பு உலர் திராட்சை

    கருப்பு உலர் திராட்சையை இரவே தண்ணிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும், அதே போல் பேரீச்சம்பழத்தை காலை உணவுடன் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் .இவை இரண்டுமே இரத்தத்தை அதிகரிக்க உதவும்.மேலும் பூசணி விதை , நட்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

Image Credit : freepik

நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை சாறு

    நெல்லிக்காய் -1 ,1 கை அளவு - கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள் தூள் - சிறிது சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் பின்பு அத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டிய ஜூஸை ஒரு பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கலாம் இரத்தம் ஊற சிறந்த பானம் இது

Image Credit : freepik

சில கூடுதல் குறிப்புகள்

    சைவ உணவு உண்பவர்களுக்கு முருங்கை கீரை ,ABC ஜுஸ், மாதுளை , பாலக் கீரை , வால்நட்ஸ்,பழங்கள் ,நட்ஸ் , காய்கறிகள் போன்றவை உதவும். இவற்றை எடுத்து கொள்ளும் போது வைட்டமின் C நிறைந்த உணவுகளையும் சேர்த்து கொண்டால் உணவில் உள்ள இரும்பு சத்தை உடல் எளிதில் உறிஞ்சி இரத்த அளவை விரைவில் அதிகரிக்க உதவுகிறது

Image Credit : freepik

படிதத்தற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik