நாக்கை சுத்தம் செய்ய இந்த ஐந்தில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்!


Alagar Raj AP
03-04-2024, 16:07 IST
www.herzindagi.com

    வாயை சுத்தம் செய்வது என்பது பற்களை மட்டும் சுத்தம் செய்வது மட்டுமல்ல நாக்கையும் சுத்தம் செய்வது தான். பற்களில் இருக்கும் கிருமிகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது போல் நாக்கில் உள்ள கிருமிகளாலும் நோய் பாதிப்பு ஏற்படும். ஆகையால் நாக்கை சுத்தம் செய்வதற்கான எளிய முறைகளை காண்போம்.

பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாற்றை கலந்து நாக்கை தேய்த்து கழுவினால் கிருமிகள் நீங்கும்.

மஞ்சள் தூள்

    பல் துலக்கும் பிரஷ் மீது கொஞ்சம் மஞ்சள் தூள் தூவி நாக்கில் மெதுவாக ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்தால் நாக்கு சுத்தமாகும்.

கற்றாழை ஜெல்

    கற்றாழை கூந்தல் மற்றும் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளைக் வழங்குவது போல் நாக்கிற்கும் நன்மையை வழங்குகிறது. கற்றாழை ஜெல்லை நாக்கில் தேய்த்து வாயை கழுவினால் நாக்கில் உள்ள அழுக்கு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

தயிர்

    தயிரில் புரோ பயாடிக் பண்புகள் அதிகம் இருப்பதால் தயிரைக் கொண்டு நாக்கை சுத்தம் செய்தால் அழுக்கு மற்றும் கிருமிகள் அகன்றுவிடும்.

நாக்கு ஸ்க்ரப்பர்

    நாக்கை சுத்தம் செய்ய இதுவே சிறந்த மற்றும் விரைவான வழி. நாக்கு ஸ்க்ரப்பரை நாக்கின் பின்புறத்தில் வைத்து மெதுவாக முன்னோக்கி இழுத்தால் அழுக்குகள் வெளிவந்து விடும்.

    இந்த இணைய கதையை முழுமையாக படித்ததற்கு நன்றி, மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளுக்கு ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.