இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் உடலில் ஏற்படும் பிரச்னைகள்
Raja Balaji
24-02-2025, 09:16 IST
www.herzindagi.com
சரும எரிச்சல்
இறுக்கமாக ஜீன்ஸ் அணியும் போது காற்றோட்டமே இருக்காது. இதன் காரணமாக தொடை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு அரிப்பு, பாதிப்பு உண்டாகலாம்.
நரம்பு சுருக்கம்
ஜீன்ஸ் அணிந்த பிறகு உடலில் சற்று எடை குறைந்தது போல உணர்வோம். இறுக்கமாக அணிந்தால் நரம்புகளில் இரத்த ஓட்டம் குறைந்து அவை சுருங்க வாய்ப்புண்டு. அதிகப்படியான அழுத்தமும் கொடுக்கப்படுகிறது.
பிறப்புறுப்பு தொற்று
பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் எரிச்சல் காரணமாக அங்கு ஈஸ்ட் வளர வாய்ப்புண்டு.
மலச்சிக்கல்
இறுக்கமான ஜீன்ஸ் காரணமாக செரிமானம் பாதிக்கப்படும். 2-3 மணி நேரத்தில் ஜீரணம் ஆக வேண்டிய உணவுகள் வயிற்று பகுதியிலேயே அடைபட்டு வலி உண்டாகும்.
கருவுறாமை
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தொடர்ந்தால் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நாளடைவில் அது கருவுறாமைக்கு வழிவகுக்கும்.
வயிற்று வலி
சிலர் ஜீன்ஸ் கழற்றும் போது வயிற்று பகுதியில் தடம் தெரியும். இது வயிற்றுப் பகுதியில் அதிகமான அழுத்தம் கொடுத்ததை உணர்த்துகிறது.