இருமல் டானிக் குடித்த பிறகு தண்ணீர் குடிக்கலாமா?


Alagar Raj AP
15-02-2025, 09:47 IST
www.herzindagi.com

இருமல்

    தொடர்ந்து இருமல் அதிகமாக இருக்கும்போது அதை சரி செய்ய இருமல் டானிக் குடிப்பது வழக்கம். அப்படி இருமல் டானிக் குடித்த பிறகு சிலர் அதன் சுவை தாங்க முடியாமல் தண்ணீர் குடிப்பார்கள்.

பாதுகாப்பானதா?

    இருமல் டானிக் குடித்த பிறகு தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா? அதனால் என்ன ஆகும் என்பதை இங்கே காண்போம்.

இருமல் டானிக்

    பெரும்பாலான இருமல் டானிக்கில் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் மற்றும் குய்பெனெசின் ஆகியவை இருக்கும். அத்துடன் தேன், கிளிசரின் மற்றும் சில தாவர சாறுகள் போன்ற பொருட்களும் இருக்கும். இவை தொண்டையில் சளி சவ்வில் ஒரு பாதுகாப்பு பூச்சை உருவாக்குகின்றன.

பாதுகாப்பு அடுக்கு

    இருமல் டானிக் குடித்த பிறகு சளி சவ்வில் உருவாகும் பாதுகாப்பு பூச்சு தொண்டையில் எரிச்சலை தனித்து இருமலை தாற்கலிகமாக சில மணி நேரம் கட்டுப்படுத்தும்.

தண்ணீர் குடிக்கலாமா?

    நீங்கள் இருமல் டானிக் குடித்த பிறகு தண்ணீர் குடித்தால் சளி சவ்வில் உருவான பாதுகாப்பு பூச்சு அகன்று விடும். இதனால் இருமல் நிற்காது.

தண்ணீர் குடிக்காதீர்

    அதனால் இருமல் டானிக் குடித்த பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் தொண்டையில் பாதுகாப்பு பூச்சு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை பொறுத்து தான் இருமலின் நிவாரண நேரம் உள்ளது.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்?

    இருமல் டானிக் குடித்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.