கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
Alagar Raj AP
09-02-2024, 18:00 IST
www.herzindagi.com
பலர் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறது. கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை காண்போம்.
மன அழுத்தம் குறையும்
கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவதன் மூலம், மூளையின் நரம்புகளில் நேரடியாக தூண்டுதல்கள் ஏற்படுவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
பாதுகாப்பாக உணர்தல்
கரடி பொம்மையை கட்டிப்பிடித்து நமக்கு நெருக்கமான ஒருவர் நம்முடன் இருப்பது போன்று இருக்கும். இது தூக்கத்தின் போது நம்மை பாதுகாப்புக்காக உணர செய்யும். இதனால் குழந்தைகள் கரடி பொம்மையுடன் தூங்குவதன் விரும்புகின்றனர்.
தனிமையை போக்கும்
நாம் மனிதர்களால் சூழப்பட்டிருந்தாலும், நவீன உலகத்தில் போராடும் பெரியவர்களுக்கு தனிமையான மனநிலையை ஏற்படுகிறது. இதை போக்க பெரியவர்கள் கரடி பொம்மையை வைத்திருந்தால் தனிமையை போக்க உதவியாக இருக்கும்.
அதிர்ச்சியான சம்பவங்களில் இருந்து மீள உதவும்
குழந்தைகளுக்கு ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களில் இருந்து மீள்வதற்கு கரடி பொம்மை உதவியாக இருக்கும். இது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
குழந்தை பருவத்தை நினைவூட்டும்
குழந்தை பருவத்தில் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்கும் பழக்கத்தை கொண்ட நபர்கள் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் சிலர் பெரியவர்களாகியும் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்த நன்மைகள் கரடி பொம்மைகளில் மட்டுமல்ல பஞ்சால் அடைக்கப்பட்ட அனைத்து பொம்மைகளிலும் இருந்து இந்த நன்மைகள் கிடைக்கும்.