அடிக்கடி மாறிவரும் வரும் காலநிலை காரணமாக சளி, காய்ச்சல், மூக்கடைப்பு ஏற்பட்டு தொண்டை புண் வருகிறது. அப்படி தொண்டை புண் வந்தால் நீங்கள் குடிக்க வேண்டிய ஆயுர்வேத பானங்களை பாப்போம்.
கிராம்பு நீர்
2 டீஸ்பூன் கிராம்பை அரைத்து 1 கப் சூடான நீரில் கலந்து குடியுங்கள். கிராம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கும்.
மஞ்சள் நீர்
1 டீஸ்பூன் மஞ்சளை 1 கப் சூடான நீரில் கலந்து அதில் உப்பு சேர்த்து குடித்தால் தொண்டை புண்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் தொற்று அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது சளியை போக்கும்.
மிளகு நீர்
2 தேக்கரண்டி மிகளை 1 கப் சூடான நீரில் கலந்து குடிக்கவும். அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்படும் மிளகு வீக்கத்தை குறைத்து இருமல் மற்றும் தொண்டை வலிக்கு நல்ல பலன் தரும்.
தேன், இஞ்சி, எலுமிச்சை நீர்
1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் இஞ்சி, எலுமிச்சை சாறு இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளிக்கவும். இந்த சூத்திரம் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து தொண்டைக்கு புத்துணர்ச்சி தரும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது நேரம் வாய் கொப்பளிக்கவும். ஆப்பிள் சீடர் தொண்டையில் உள்ள கிருமிகளை அளித்து தொண்டை வலியை குறைக்கும்.