சிறிய சிறுகீரையில் இருக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்


Sanmathi Arun
14-04-2023, 06:01 IST
www.herzindagi.com

சிறுநீரகத்தை காக்கிறது

    சிறுநீரகங்களின் செயலை துரிதப்படுத்துகிறது. சிறுநீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றம் செய்கிறது மற்றும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

Image Credit : freepik

மலச்சிக்கல் நீங்கும்

    சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை சரி செய்து, குடலை சுத்தப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டுகிறது.

Image Credit : freepik

கருத்தரிக்க உதவுகிறது

    கருத்தரிக்க முயற்சி செய்பவர்களுக்கு சிறு கீரை ஒரு சிறந்த மருந்தாகும். இதை தினமும் உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் உதவும்.

Image Credit : freepik

இரத்த சோகை நீங்கும்

    சிறுகீரையில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகி இரத்த சோகை நோய் இல்லாமல் போய் விடும்.

Image Credit : freepik

எலும்புகளை பலமாக்கும்

    இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் ஆதாரமாக இருக்கிறது. இதனால் தினமும் சிறுகீரை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது.

Image Credit : freepik

கண் பார்வைக்கு நலம் தருகிறது

    வைட்டமின் A நிறைந்துள்ளதால் கண்களை ஆரோக்கியமாக காக்கிறது. மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது

Image Credit : freepik

ஞாபகசக்தி அதிகரிக்கும்

    சிறுகீரை தினமும் உட்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

Image Credit : freepik

உடல் சூட்டை குறைக்கிறது

    சிறுகீரையை வாரம் 2 -3 முறை சமைத்து சாப்பிடுவது உடல் சூட்டை குறைக்க உதவும். உடலை நன்கு குளுர்ச்சியாக்கும்

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik