வாழ்க்கையில் மகிழ்ச்சி தானாக வர வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!


Jansi Malashree V
04-03-2024, 14:11 IST
www.herzindagi.com

    நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியுடன் வாழ்வதற்கு மூளையின் செயல்திறனோடு மகிழ்ச்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதோ மூளையை மகிழ்விக்கும் சில செயல்பாடுகள் உங்களுக்காக.

பலத்தை வௌிப்படுத்துங்கள்

    வாழ்க்கையில் எந்த விஷயங்களையும் அசால்டாக செய்யும் அளவிற்கு பலம் உங்களிடம் உள்ளது. எனவே அதை வெளிப்படையாக செயல்படுத்தினாலே பதட்டம் ஏற்படாது. மூளையின் செயல்திறனையும் மேம்படுத்த முடியும்

நன்றியுணர்வுடன் இருத்தல்

    நமக்கு எப்போதுமே கஷ்ட காலத்தில் உதவியர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அவர்களின் அக்கறையும், பாராட்டுதல்களும் பல நேரங்களில் உங்களது மனதையும், மூளையின் செயல்பாடுகளையும் மகிழ்வுடன் வைத்திருக்கும்.

உடற்பயிற்சி செய்தல்

    உடலுக்கும் மனதிற்கும் எப்போதும் ஆற்றலை அளிப்பது உடற்பயிற்சிகள் தான். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மனதில் எழக்கூடிய சிந்தனைகளை அகற்றி மனதை ஒருநிலைப்படுத்தும்.

புத்தகம் படித்தல்

    பிடித்த புத்தகங்களைப் படிப்பது உங்களது மனதை ஒருநிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தவும், மூளையை இன்பமாகவும் வைத்திருக்கிறது.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

    நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் வலிமையைத் தரக்கூடியதாக அமையும்.

தூக்கம் அவசியம்

    உங்கள் மூளை ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.நல்ல தூக்கம் நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

    இதுபோன்ற நடைமுறைகளைத் தொடர்ச்சியாக நீங்கள் மேற்கொண்டாலே உங்களது வாழ்க்கையில் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.