நீரிழிவு நோயின் 8 வாய்வழி அறிகுறிகள்


Alagar Raj AP
26-03-2025, 21:23 IST
www.herzindagi.com

நீரிழிவு வாய்வழி அறிகுறிகள்

    நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் ஏற்படும் ஒரு நோயாகும். நீரிழிவு நோயின் பெரிய பிரச்சனை என்னவென்றால், அதன் அறிகுறிகள் மிகவும் தாமதமாக வெளிப்படும். இருப்பினும் வாயில் சில அறிகுறிகள் ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வறண்ட வாய்

    நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக இரத்த சர்க்கரை அளவு காரணமாக சிறுநீர் அதிகம் வெளியேறும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக வாய் வறண்டு போகும்.

வாய் புண்

    உடலில் நீர்ச்சத்து குறையும் போது உமிழ்நீர் உற்பத்தி குறைந்து வாயில் வறட்சி ஏற்பட்டு புண்கள் உருவாகும். இப்படி வாய் புண்கள் வருவது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பல் சொத்தை

    உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது உமிழ்நீரில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ள உமிழ்நீர் பற்களுடன் வினைபுரிந்து பல் சொத்தைக்கு வழிவகுக்கும்.

வாய் எரிச்சல்

    நீரிழிவு நோய் வாயில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும், இது வாயில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

ஈறு அழற்சி

    உயர் இரத்த சர்க்கரை அளவுகள் ஈறுகளில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும், இதனால் ஈறுகளில் அலர்ஜி உண்டாகும்.

வாய் நாற்றம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் பற்றாக்குறை காரணமாக கீட்டோன் என்ற அமிலம் இரத்தத்தில் குவியும் போது வாயில் அழுகிய பழம் நாற்றம் அடிக்கும்.

வெள்ளை திட்டுகள்

    உமிழ்நீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், நாக்கில் ஈஸ்ட் செழித்து வளரும். இதன் விளைவாக நாக்கில் வெள்ளை திட்டுகள் உருவாகும்.

சுவை மாற்றம்

    நீரிழிவு நோய் சுவை உணர்வை பாதிக்கலாம், இதனால் நீங்கள் உணவு சாப்பிடும் போது சில நேரங்களில் சுவையில் மாற்றம் தெரியும்.