சிறந்த ஆரோக்கியத்திற்கான 8 ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்
Alagar Raj AP
19-02-2025, 12:41 IST
www.herzindagi.com
ஆயுர்வேத பழக்கங்கள்
நாம் செய்யும் சில தினசரி பழக்கவழக்கங்கள் நம் ஆயுட்காலத்தை அதிகரிக்கும். இதற்கு சிறந்த ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதன்படி சிறந்த ஆரோக்கியத்ரிக்கு இந்த 8 ஆயுர்வேத பழக்கவழக்கங்கள் உங்களுக்குக் கைகொடுக்கும்.
காலை எழுந்தல்
தினமும் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது உங்கள் உடல் மற்றும் மன செயல்பாட்டை பெரிதும் மேம்படுத்தும்.
எலுமிச்சை தண்ணீர்
உங்கள் நாளை வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீருடன் தொடங்குங்கள். எலுமிச்சை தண்ணீரில் உள்ள அமிலம் உணவு செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் குடல் பாதையை சுத்தப்படுத்தும்.
நாக்கு ஸ்க்ரப்பர்
நாக்கில் உள்ள நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற நாக்கு ஸ்க்ரப்பரை தினமும் பயன்படுத்தவும். மேலும் இது உணவின் சுவை உணர்வை அதிகரிக்க உதவும்.
ஆயில் புல்லிங்
வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் காலை 5-10 நிமிடங்கள் உங்கள் வாயயை தேங்காய் எண்ணெயால் கொப்பளிக்கவும். இது வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் பல் பிரச்சனைகளை தடுக்கவும் உதவும்.
மூச்சுப்பயிற்சி
தினசரி சில நிமிடங்கள் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறையும், ஆற்றல் கிடைக்கும் மற்றும் கவனம் மேம்படும்.
மூலிகைகள்
மஞ்சள், அஸ்வகந்தா, திரிபலா போன்ற மூலிகை பொருட்களை உங்கள் தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மசாஜ்
சூடான எண்ணெயால் தினமும் சுயமாக மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உதவும்.
தூக்கம்
இரவு 10 மணிக்குள் தினமும் தூங்கச் செல்வதன் மூலம் நிம்மதியான, நிறைவான தூக்கத்தை பெற முடியும். இதனால் காலையில் புத்துணர்ச்சியுடன் உங்கள் நாள் தொடங்கும்.