International Yoga Day 2024: கழுத்து வலியை போக்கும் யோகாசனங்கள்


Alagar Raj AP
19-06-2024, 16:48 IST
www.herzindagi.com

    பழங்கால இந்தியாவில் தோன்றிய யோகா தற்போது உலகம் முழுவதும் அனைவருக்கும் பரிட்சியமான உடற்பயிற்சியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் பயன்பெறும் வகையில் கழுத்து வலியை போக்கும் யோகாசனங்கள் குறித்து காண்போம்.

கோமுகாசனம்

    அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி இருந்தால் இந்த யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்வதால் கழுத்து, மார்பு, தோள், கைகள் பலப்படும்.

புஜங்காசனம்

    முதுகுத் தண்டு தசைகள் வலுப்பெற இந்த ஆசனம் செய்யலாம். கூடுதலாக, இது வயிறு, மார்பு, இடுப்பு, தோள்கள் மற்றும் கைகளின் தசைகளை வலுப்படுத்தும்.

பச்சிமோத்தாசனம்

    இந்த ஆசனம் முதுகெலும்பு மற்றும் கழுத்தில் ஏற்படும் பதட்டத்தை குறைகிறது. மேலும் இது உங்கள் கை மற்றும் கழுத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

மர்ஜாரியாசனம்

    கழுத்து வலியை போக்கவும் முதுகெலும்பை நநீட்டவும் இந்த ஆசனம் உதவுகிறது. மேலும் இது உங்கள் வயிற்று உறுப்புகளைத் தூண்டி சீராக இயங்க செய்யும்.

தடாசனம்

    இந்த ஆசனம் உங்கள் கழுத்து மற்றும் தலையை தளர்வடைய செய்யும். கூடுதலாக மேல் உடலில் உள்ள பதற்றத்திலிருந்து விடுபெறவும் செய்யும்.

மகராசனம்

    மகராசனம் கழுத்தில் இருந்து கீழ் முதுகு வரை வலியைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த ஆசனம் உடல் முழுவதையும் ரிலாக்ஸ் செய்யும்.