நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்தியாவின் அரபி குதிரை என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர். உடல் எடையைக் குறைப்பதில் அனுஷ்கா ஷெட்டியை கில்லாடி எனக் குறிப்பிடலாம். சைஸ் 0 படத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்த அவர் பாகுபலி படத்திற்காக 7 கிலோ எடையை சட்டென்று குறைத்தார். அது எப்படி சாத்தியம் ? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீரேற்ற ரகசியம்
உடல்எடையைக் குறைக்க நடிகை அனுஷ்கா அறிவுறுத்தும் முதல் விஷயம் நீரேற்றம். இது ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு பளபளப்பிற்கும் பங்களிக்கிறது.
யோகா
அனுஷ்கா ஷெட்டி நடிகையாக வலம் வரும் முன் யோகா பயிற்சியாளராக பணி செய்தவர். அவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க யோகா செய்கிறார்.
உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா ஷெட்டி கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார். எந்த காரணத்திற்காகவும் அவர் உடற்பயிற்சி செய்வதை தவறவிடுவதில்லை.
பச்சை காய்கறிகள்
அவரது உணவு பழக்கத்தில் பச்சை காய்கறிகள் கட்டாயம் இடம்பெறுகின்றன. மூன்று வேளை உணவிலும் ஏதாவது ஒரு பச்சை காய்கறி சாப்பிடுகிறார்.
ஸ்மால் மீல்ஸ்
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு வயிற்றை நிரப்புவதற்கு பதிலாக பசிக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுகிறார்.
இரவு 8 மணிக்கு முன் இரவு உணவு
இரவு உணவை 8 மணி வரை முடித்து விடுகிறார் அனுஷ்கா. இது எடையைக் குறைக்க உதவும் மற்றொரு குறிப்பிடத்தக்க பழக்கமாகும். இதனால் வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்துகிறது.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் தோழிகளுக்கு பகிரவும்