உணவுகளில் சீரகம் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்


Alagar Raj AP
01-04-2025, 21:02 IST
www.herzindagi.com

சீரகம்

    நல்ல சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் உணவுகளில் முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படும் சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. என்னதான் சீரகம் உடலுக்கு தேவையான மருத்துவ நன்மைகளை வழங்கினாலும், அதிகமாக உணவுகளில் சேர்த்தால் பக்க விளைவுகள் ஏற்படும்.

விந்தணுக்கள் குறையும்

    சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து விந்தணுக்களை பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கருச்சிதைவு

    கர்ப்பிணிகள் சீரகத்தை அதிகமாக உணவுகளில் சேர்த்துக் கொள்வது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய விரசவத்திற்கு வகுக்கும் என்று கூறப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு

    சீரகத்தின் உள்ள எண்ணெய் பண்புகளில் கல்லீரல் எதிர்மறையாக பாதிக்கும். இதனால் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் சீரகத்தை அதிகமாக உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இரத்த சர்க்கரை அளவு

    சீரகத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

தாய்ப்பால் குறையும்

    தாய்ப்பாலூட்டும் மகளிர் உணவுகளில் சீரகத்தை அதிகம் சேர்ப்பதை தவிக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் சுரப்பை சீரகம் குறைப்பதாக கூறப்படுகிறது.

வாந்தி மற்றும் குமட்டல்

    சீரகத்தில் போதையுணர்வை ஏற்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இதன் அதிகப்படியான நுகர்வு மனப்பிறழ்வு, மயக்கம், குமட்டல் உணர்வுகளை ஏற்படுத்தும்.