உங்கள் மனநிலைக்கு ஏற்ப இந்த தேநீர்களை குடிச்சு பாருங்க..!


Alagar Raj AP
20-02-2024, 16:16 IST
www.herzindagi.com

    புத்துணர்ச்சிக்காக மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தேநீர் பருகி வருகின்றனர். ஆனால் உங்களின் ஒவ்வொரு மனநிலைக்கு ஏற்ப குடிக்க வேண்டிய சில பிரத்யேக தேநீர்களும் இருக்கிறது.

சோர்வில் இருந்து விடுபட

    மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை கிரீன் டீயில் பல ஆரோக்கியங்கள் இருக்கிறது. நீங்கள் சோர்வாக உணரும் போது க்ரீன் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆற்றல் அதிகரிக்க

    ஆற்றல் போதுமானதாக இல்லை என்று உணரும் தருணத்தில் பிளாக் டீ எனப்படும் கடுங்காப்பி குடிப்பதால் ஆற்றலை அதிகரிக்க முடியும்.

அமைதியாக இருக்க

    ஒரு கப் லாவெண்டர் தேநீர் குடிப்பதன் மூலம் உங்கள் மன நிலையைத் தனித்து அமைதியாக இருக்க முடியும். லாவெண்டர் தேநீர் மனநிலையை உறுதிப்படுத்துகிறது மற்றும் பல நரம்பியல் பிரச்சனைகளுக்கு பலனளிக்கும்.

உடல் நலம் சரியில்லாத போது

    சளி மற்றும் காய்ச்சலின் போது இஞ்சி, தேன், எலுமிச்சை கலந்து தேநீர் குடித்தால் உடல்நிலை குணமாகும். குமட்டல், மூட்டுவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகளை இஞ்சி குணப்படுத்தும். தேன் இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

தூக்கமின்மையை போக்க

    தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தூங்குவதற்கு முன் கெமோமில் தேநீர் குடிப்பது உங்கள் தூக்கத்தை அதிகரிக்கும். இந்த மலரில் உள்ள பண்புகள் நரம்புகளை அமைதிப்படுத்தி தூக்கத்தை மேம்படுத்தும்.

மனநிலை மேம்பட

    மனம் சோர்வாக இருக்கும் போது லெமன்கிராஸ் தேநீர் குடித்து பாருங்கள் உங்கள் மன சோர்வு நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள்.