சூரியகாந்தி விதைகள் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
G Kanimozhi
27-11-2024, 13:12 IST
www.herzindagi.com
சூரியகாந்தி தாவரத்தின் பழம் தான் சூரியகாந்தி விதை என்று கூறப்படுகிறது. உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் இந்த சூரியகாந்தி விதைகளில் நிறைந்துள்ளது.
தினசரி உணவில் சூரியகாந்தி விதைகளை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும்?
ஊட்டச்சத்துக்கள்
புரத சத்து கார்போஹைட்ரேட் நார்ச்சத்து வைட்டமின் ஈ சத்து நியாசின் வைட்டமின் பி6 இரும்பு சத்து மெக்னீசியம் ஜிங்க் மாங்கனீஸ் காப்பர் மற்றும் செலினியம் போன்ற உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
இதய ஆரோக்கியம்
இந்த சூரியகாந்தி விதையில் அதிக அளவு மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இந்த மெக்னீசியம் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
கெட்ட கொழுப்பு
இந்த சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. அதே போல நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் தன்மை இந்த சூரியகாந்தி விதைக்கு உள்ளது.
பெண்கள் ஆரோக்கியம்
இந்த சூரியகாந்தி விதைகள் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது.
மலச்சிக்கல்
பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சூரியகாந்தி விதைகளில் உள்ள நொதிகள் நம் செரிமான மண்டலத்தை ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறு பிரச்சனைகளை நாளடைவில் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.