பசும்பாலுக்கு இணையான கால்சியம் நிறைந்த பானங்கள்


Alagar Raj AP
26-01-2025, 09:24 IST
www.herzindagi.com

கால்சியம்

    எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு நரம்பு சமிக்ஞைகள் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு கால்சியம் அவசியமான கனிமமாக உள்ளது.

கால்சியம் பானங்கள்

    கால்சியத்தை வழங்குவதில் பசும்பால் முக்கிய பானமாக இருந்தாலும் அதற்கு இணையாக சில பானங்கள் கால்சியத்தை வழங்குகிறது.

ஆரஞ்சு ஜூஸ்

    ஆரஞ்சு ஜூஸில் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளன.

பாதாம் பால்

    அதிக கால்சியத்தை வழங்குவதிலும் குறைந்த கலோரிகள் உள்ளதாகவும் பாதாம் பால் இருக்கிறது.

ராகி மால்ட்

    கால்சியம் நிறைந்த தானியங்களில் ராகி முக்கியமானதாக இருக்கிறது. இதில் செய்யப்படும் ராகி மால்ட் எலும்புகளை வலுப்படுத்தும்.

தேங்காய் தண்ணீர்

    தேங்காய் தண்ணீர் கால்சியத்தை வழங்குவதோடு உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகளை தருகிறது.

அத்திப்பழம் ஜூஸ்

    கால்சியத்தின் நல்ல ஆதாரமாக இருக்கும் அத்திப்பழம் ஜூஸ் எலும்புகள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகிறது.