குறைந்த கலோரி உணவுகள், எடையை குறைக்க இது தான் பெஸ்ட்!


Shobana Vigneshwar
08-10-2023, 18:00 IST
www.herzindagi.com

குறைந்த கலோரி உணவுகள்

    உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்பொழுது சரியான உணவுகளை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடை இழப்புக்கு உதவக்கூடிய குறைந்த கலோரி உணவுகளை இன்றைய பதிவில் காணலாம்.

Image Credit : freepik

ஓட்ஸ்

    இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்துக் கொள்ளவும், பசி உணர்வை கட்டுப்படுத்தவும் உதவும். சுமார் 1/2 கப் ஓட்ஸில் 148 கலோரிகள் உள்ளன.

Image Credit : freepik

சூப்

    முக்கிய உணவிற்கு முன்பு சூப் குடிப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தடுக்கலாம். மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகளும் நல்ல நிறைவான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

Image Credit : freepik

முட்டை

    முட்டையில் குறைந்த அளவு கலோரிகளும் அதிக அளவு புரதச்சத்துக்களும் உள்ளன. முட்டை சாப்பிடும் பொழுது, நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. குறைந்த கலோரியுடைய ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன்களை தேர்வு செய்து சாப்பிடலாம்.

Image Credit : freepik

சியா விதைகள்

    உங்களுடைய உணவின் ஊட்டச்சத்து மதிப்பீட்டை அதிகரிக்க அதில் சியா விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் குறைந்த அளவு கலோரிகளும், அதிக அளவு நார்ச்சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் காணப்படுகின்றன.

Image Credit : freepik

பாப்கார்ன்

    உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் குறைந்த கலோரி உடைய பாப்கார்னை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik