ஊறவைத்த சியா விதையை காலையில் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


Alagar Raj AP
22-06-2024, 14:00 IST
www.herzindagi.com

    பொதுவாக சியா விதைகளில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதை இரவில் ஊற வைத்து காலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி வளர்ச்சி

    ஊறவைத்த சியா விதையை காலை சாப்பிட்டால் முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கலாம். இந்த விதையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் முடியை வேர்களில் இருந்து பலப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.

வயிற்றை சுத்தப்படுத்தும்

    காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த சியா விதைகளை உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும், மேலும் மலச்சிக்கலை போக்கி வயிற்றை சரியாக சுத்தப்படுத்தும்.

எடை மேலாண்மை

    ஊறவைத்த சியா விதைகளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.

வலுவான எலும்புகள்

    சியா விதைகளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

    சியா விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்.

ஊட்டச்சத்துக்கள்

    28 கிராம் சியா விதையில் 138 கலோரிகள், 83% நார்ச்சத்து 34% கொழுப்பு மற்றும் 19% புரதம் உள்ளது. மேலும் 6% நீர் மற்றும் 46% கார்போஹைட்ரேட் உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து உடலின் ஆரோக்கியத்திற்கு கூடாரமாக இருக்கிறது.