சீத்தாப்பழத்தை இப்படி சாப்பிடுங்க இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்
Alagar Raj AP
09-04-2025, 19:19 IST
www.herzindagi.com
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சுட்ட சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தை அப்படியே சாப்பிட்டுருப்பீங்க, ஆனால் இப்படி நெருப்பில் சுட்டு சாப்பிடுறீங்களா? சீத்தாப்பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் அதன் சுவை அதிகரிப்பதுடன் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு எளிதாகக் கிடைக்கும்.
செரிமான நன்மை
சீத்தாப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக சுட்ட சீத்தாப்பழம் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி
இவற்றை உட்கொள்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும்
சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் சீதாப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் சுட்டு சாப்பிடலாம்.
எலும்புகள் வலுவாகும்
சீத்தாப்பழத்தை சுட்டு சாப்பிடும் போது அதன் கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு எளிதாக கிடைக்கும். இதன் மூலம் எலும்புகள் வலுவாகும், எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாது.
எப்படி செய்வது?
விறகு அடுப்பில் அல்லது நெருப்பில் சீத்தாப்பழத்தை நன்கு சுட்டு எடுத்துக் கொள்ளவும். பின் சுட்ட சீத்தாப்பழத்தை ஆற வைத்து அப்படியே சாப்பிடலாம்.