தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!


Shobana Vigneshwar
19-09-2023, 22:10 IST
www.herzindagi.com

வேர்க்கடலை நன்மைகள்

    உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு சூப்பர் உணவு தான் வேர்க்கடலை. தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

Image Credit : freepik

நினைவாற்றல் அதிகரிக்கும்

    வேர்கடலையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. வேர்க்கடலையின் உள்ள பண்புகள் மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.

Image Credit : freepik

சரும ஆரோக்கியம்

    வேர்க்கடலையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வர ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கலாம்.

Image Credit : freepik

சீரான செரிமானம்

    வேர்க்கடலையில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையை ஊற வைத்து சாப்பிடலாம்.

Image Credit : freepik

இரத்த சோகையை தடுக்கும்

    வேர்கடலையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து, இரத்த பற்றாக்குறையை நீக்கவும், இரத்த சோகை போன்ற பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

Image Credit : freepik

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

    ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதை சரியான முறையில் சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கலாம்.

Image Credit : freepik

எலும்புகளை பலப்படுத்தும்

    வேர்க்கடலையில் நிறைந்துள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்துகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கின்றன.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik