உங்களை வியப்பில் ஆழ்தும் வரகு அரிசியின் நன்மைகள்


Shobana Vigneshwar
14-04-2023, 09:26 IST
www.herzindagi.com

வரகு அரிசி

    அரிசியில் பல வகைகள் உண்டு. அதிலும் சிறுதானிய அரிசி வகைகள் மிகவும் ஆரோக்கிமானவை. இன்றைய பதிவில் வரகு அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

Image Credit : freepik

சிறுநீரக ஆரோக்கியம்

    கோடை காலத்தில் வரகு அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதையும் தடுக்கலாம். இது சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

Image Credit : freepik

இரத்த ஓட்டம் சீராகும்

    வரகு அரிசி இரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, இரத்தத்தை தூய்மைப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது.

Image Credit : freepik

மலச்சிக்கலை போக்கும்

    வாரத்திற்கு 2-3 முறை வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வயிறு, குடல் புண்களை ஆற்றும். இதனுடன் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

Image Credit : freepik

ஊட்டச்சத்துகள் நிறைந்தது

    உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் வரகு அரிசியில் நிறைந்துள்ளன.

Image Credit : freepik

இதய ஆரோக்கியம்

    வரகு அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது வரகு அரிசி உணவுகளை சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik