பருத்தி பால் நன்மைகள், பாரம்பரிய உணவுக்கு நிகர் ஏதுமில்லை!


Shobana Vigneshwar
25-07-2023, 12:45 IST
www.herzindagi.com

பருத்தி பால் நன்மைகள்

    தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சத்தான இந்த பானத்தில் ஊட்டச்சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. நமது பாரம்பரிய பானத்தின் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

Image Credit : freepik

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

    பருத்தி பாலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

Image Credit : freepik

வயிற்றுப் புண்களை ஆற்றும்

    பருத்தி பாலில் உள்ள பண்புகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. உடல் சூட்டை குறைக்கவும் வயிற்று புண்களை ஆற்றவும் பருத்திப்பால் குடிக்கலாம்.

Image Credit : freepik

சளிக்கு நல்லது

    பருத்தி பாலை தயாரிக்கும் பொழுது இஞ்சி, ஏலக்காய், பாதாம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பல விஷயங்களும் சேர்க்கப்படுகின்றன. இது சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும்.

Image Credit : freepik

பெண்களுக்கு நன்மை தரும்

    பருத்தி விதைகள் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசமிக் குறியீட்டை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நீர் கட்டிகளை தடுக்கவும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும் உதவுகின்றன.

Image Credit : freepik

நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும்

    பருத்தி பால் வைட்டமின் E இன் சிறந்த ஆதாரமாகும். இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மனதை அமைதிப்படுத்தி, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பருத்திப்பால் குடிக்கலாம்.

Image Credit : freepik

மூட்டு வலி

    பருத்தி பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இது மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கும் மிகவும் நல்லது.

Image Credit : freepik

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

    இதில் உள்ள நல்ல கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இருப்பினும் ஏதேனும் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik